
பேருந்து பயணம்...........
தினம் பயணிக்கையில்
என்னையே விழுங்கி விடும் பார்வை
எதற்கும் பதில் சொல்லா மௌனம்
என்னை யாரேனும் கடிந்து கொண்டால்
எரித்துவிடும் கோபம்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
படியையே பார்க்கும் ஏக்கம்
இன்றேனும் பேசிடுவோம் என்ற தயக்கம்
என் இருக்கையை கடக்கும்போது
உன்னுள்ளே வெக்கம்
நண்பனோடு சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு
தூரத்திலிருந்தே புன்னகை
இதை எல்லாம் மனதில் வைத்துதானடி
என் இதயத்தை தூது அனுப்பினேன்
எனக்காக ஒரு இதயம் துடிக்கிறதே
என்று இருமாந்திருந்தேனடி
உன்னை என்னவளாக்கி கொள்ள
கர்வம் கொண்டிருந்தேனடி
எதற்கும் பதில் சொல்லா உன் மௌனத்தோடு
விட்டிருந்தால் உயிர் வாழ்ந்திருபேனடி
நீ கிழித்து எரிந்தது கடிதத்தை அல்ல பெண்ணே
என் இதயத்தை
நீ குப்பையில் வீசியது உனக்கு காகிதமாக
இருக்கலாம் ஆனால் விழுந்தது
என் இதயமாயிற்றே
ரகசிய பெண்ணே..............!
உங்கள் - சுதர்சன்சுந்தரம்
Comments
Post a Comment