![]() |
நித்தமும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் வலி |
மண்ணில் மலராய் மலர்நத உன்னை
நிர்மூலமாக்கி ரணமாக்கி
மரணபடுக்கைக்கு அழைத்து சென்ற
மானங்கெட்ட நாய்களுக்காக
மனித உரிமைகள் ஆணையமும்,
நீதிமன்றமும் -நீ
மானமிழந்ததை நித்தமும் விவரிக்க
சொல்லி இம்சிப்பார்களென
மரித்து போனாயோ....?
தேசத்தின் தாக பசியை தீர்க்க
நடுவர்குழு அமைத்தும் ஓய்ந்தபாடில்லை
பலவருடங்களாக...........
காமம் தலைகேறிய நாய்களின்
தேகபசிக்கு இரையாகிப்போன நமக்கெப்படி
தீர்வு கான்பார்களென
மரித்து போனாயோ....?
தாயோ, தங்கையோ,
தன குடும்ப உறுப்பினரோ..
இரையானால் மூடி மறைப் பவர்கள்
கற்பு விஷயம் என்பதை
கருத்தில் கொள்ளாது வெளிச்சமிடும்
ஊடகத்தை நினைத்து
மரணித்து போனாயோ....?
அன்பு சகோதரியே அன்புக்குரியவர்களை
ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திவிட்டு
மரணவாசலுக்கு செல்கையில்
என்னென்ன நினைத்தாயென
நினைக்கையிலே
நெஞ்சமெல்லாம் குமுறுகிரதே
அய்யகோ............!!
Comments
Post a Comment