குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.- குறள்


குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.- குறள்

நாடு, நகரம், இனம்,ஜாதி,
மதம் இவை எதுமென்றி
உலகெங்கும் பேசும்  ஒரே
மொழி மழலை மொழி

தாய் தன்சேயை வாரி அணைக்கையில்
அமிழ்தாய் ஊறும்  உமிழ்நீரும்
அதோடு சேர்ந்த அமிழ்த மொழியும்
அதற்கு ஈடாய் பேசும் தாயும்
அந்த உளறல் மொழியில்தான்
எத்தனை அர்த்தங்கள்......!! 

வாய் பிதுக்கி, கைகளை  குவித்து
கால்களை  நீட்டி முடக்கி, விழி பேசி 
தலையசைக்கும், குறும்புகளை
ரசிக்கும் குணமிருந்தால்
அதன் ஒவ்வொரு குணத்திற்க்கும் 
ஆயிரமாயிரம் கதை புனைந்திடலாம்......!!

அள்ளி அணைத்திட  கெஞ்சும் மொழியிலும்
அதை  புறம் தள்ளும்  மழலையின்
ஆசையாய்  கொஞ்சும்  மொழியிலும்
ஆனாந்தம்  எத்தனை
மழலை பேச்சை எப்படி அறிவாளோ
தேவைஅறிந்து அளிப்பவள் அன்னை....!

விண்ணின் விண்மீனை போல்
வாழ்வில் ஒளிர என்றும்
குறுக்குவழியை  கையாளாதே
செருக்கை ஒழியென அறிவுரைப்பவள்
காலனாவிர்க்கு கூட  வழி இல்லையெனினும்
தம்பிள்ளையை  கலெக்டராய்
பார்க்க ஆவலுள்ளவள்  அன்னை....!!

ங்ஞாம்ம்  ம்மமா  ப்ப்பா ததாதா
மாமாமா ப்லலலா ம்ம்ம்ம்ம்ம்உம்.......
காகககக் தர்ர்ர்ர்ர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர்   ...............
(ஏதும் விளங்காவிடில்
மறுமுறை முயற்சியுங்கள் )
மழலை மொழி கற்க,  கற்று தர
பல்கலைகழகங்கள் தேவைஇல்லை..
மழலையோடு சற்று உரையாடினால்
நாமும் மழலையாவோம்....!!  

Comments