வாழ்த்துக்கள்

முழம் ஏறினால் வெற்றி என்ற இடத்தில
முழம் ஏறி ஜான் சறுக்கினால் வெற்றியின் விளிம்பு
ஆனால் ஜான் ஏறி முழம் சறுக்கினால் .......தோல்வியே?

தோல்வியே வெற்றியின் முதல் படி
முயன்றால் முடியாதது இல்லை
என்பது ஆன்றோர் வாக்கு

முடியும் என்றால் முயற்சி செய்
முடியாது என்றால் பயிற்சி செய்
முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் ரகசியம்

வெற்றி எட்டிவிடும் தூரத்தில் என்றானதும்
முயன்றும் பயின்றும் பார்க்கிறேன்
வெற்றி மட்டும் கிட்டா கனியே ?

இருப்பினும் முதல் முயற்சியிலேயே
வெற்றி முகம் கண்ட இதயத்தை
வெற்றியே கண்டிராத நான்....

நேரில் வாழ்த்த முயல்கிறேன்
நா தழுதழுக்கிறது இதயம் கனக்கிறது
வாயில் வார்த்தை வர மறுக்கிறது

ஆனாலும் வெற்றி கனி
பறித்திட்ட இதயத்திற்கு ....வாழ்த்துக்கள்
அன்புடன் -சுந்தரசுதர்சன்

Comments