சகோதரியின் பிரிவு..?

அணைத்து சமுதாய தமிழ் சகோதரிகளுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்
இக்கவிதை பிடிக்காதவர்கள் சே()ட்டை செய்ய வேண்டாம், நான் கிராம சூழலில் வளர்ந்தவன் என்பதால் அச்சூழலை மைய படுத்தி இங்கு பதிவு செய்திருக்கிறேன்

சகோதிரி.....
தந்தைக்கு பிரியமானவள்
தாயின் நம்பிக்கைக்கு பாத்திரமானவள்
சகோதர சகோதிரியோடு சுட்டித்தனம் செய்பவள்

வயக்காட்டிற்கு செல்லும் தாய்
வரும் முன்னரே சமைத்து வைத்து
வீடு கூட்டி பற்று பாத்திரம் தேய்த்து
தாயின் சுமையை குறைப்பவள்

பணிக்கு செல்லும் தந்தைக்கு
பணிவிடைகள் செய்து
பற்றுதலோடு கவனித்து
பரிதவிப்பவள் சென்றவர் திரும்பும் வரை.

நாளும் கிண்டல், கேலி, சீண்டல்
சண்டை சச்சரவு இருந்தாலும்
சகோதர சகோதிரியோடு
கூடி குலாவி மகிழ்பவள்

திருவிழா, சுபநிகழ்ச்சி, கோயில்
என வெளியூர் சென்றாலே
ஏங்கும் மனது மனம் முடித்து
வரன் வீட்டிற்கு செல்லும்.....

சகோதிரியின் பிரிவு
தற்காலிகமானதுதான் என்றாலும்
மனதில் ஏனோ ஒரு கலக்கம்
இப்பிரிவே நிரந்தரமாகி போனால் ......????????

உங்கள் சுதர்சன்சுந்தரம்

Comments