வல்லரசாய்

இந்தியா வல்லரசாக
கனவு
காணுங்கள் என்ற
கலாம் கண்ட கனவு
கனவாகவே.....?

பற்றாகுறை இல்ல பட்ஜெட்

பணக்காரனும் ஏழை
பங்காளனும் சமம்

கங்கை காவிரி இணைப்பு

சாதி மதம் இல்ல ஒற்றுமை

சமமான சட்டம்

அனைவருக்கும் கல்வி

பாமரனின் பஞ்சம்

அந்தஸ்து அல்லாதோர்க்கும்
சுகாதார மருத்துவம்

தேசிய மொழி சர்ச்சை இன்றி
கட்டாய பாடம்

குண்டு குழி இல்லா சாலை

வாரிசு இல்லா அரசியல்

கொடியர்களுக்கு குடை பிடிக்கா
மனித உரிமை ஆணையம்

இந்தியாவை பற்றி
இழிவு பேசா
இந்திய பிரஜை

ஆயுதம் இல்லா தோழமை நாடு

ஊழல் இல்லா அரசு துறைகள்

பேதம் காட்டா மத்திய அரசு

குறை கூறா மாநில அரசு

ஜனநாயகத்தை விற்காத வேட்பாளன்
(பணம் பொருள் குடுத்தால்தான் வாக்களிப்போம் என எவனும் கூறியதில்லை
விற்பவர் இருப்பதால் வாங்குபவர் இருக்கத்தான் செய்வர்)

சமூக கரைகள் பல

கரைகள் களைய படாத வரை
வல்லரசாய் இல்லை
நல்லரசாய் கூட இருக்கமுடியாது....

(கரைகளை களைந்து நல்லரசு தந்தால்
உலக அரங்கில் வல்லரசுதான் நாம்.....)

Comments