அடிமையாகி போனேன்




முகநூலில் (
facebook)இன்பமும் உண்டு
துன்பமும் உண்டு
இன்பமமும் துன்பமும் சம அளவில்
எதுவும் இன்பம் தான்
எல்லை மீறாத வரை
எல்லை மீறிய சில பதிவுகள்
துன்பத்தின் வரிசையில்
துன்பம் என்றாலே
மனதில் சஞ்சலம்
துன்பம் வேண்டாம்
ஒதுக்கிவிடுவோம்
உள்ளுரிலேயே
தேங்கி கிடந்த
நட்பு வட்டத்தை
விரிவாக்கிய இடம்....
வெளியூர் வெளிநாடு வரை
பரவி கிடந்த சமுகத்தை
என் ஜன்னலுக்குள்ளே (விண்டோஸ்)கொடுத்த தளம்....
முகமில்லாத பலரையும்
முகத்தோடு சிலரையும்
நண்பர்களாக
ஒருங்கே பார்க்கும் இடம்

முகமில்லாதவர்க்கும்
முகவரி கொடுக்கும் இடம்
நண்பர்களோடு சதா பேசி அரட்டை அடித்த இடம்...

அடுத்த தலைமுறை சகாக்களும்
மச்சி, மாமு என்று
தலைமுறை இடைவெளி குறைத்து
அன்பை பொழியும் இடம்....

பதிவேற்றத்துக்கும் பதிவிரக்கத்துக்கும்
கலாய்பது, கமென்ட் அடிப்பது
ஓட்டுவது சைட் அடிப்பது,
சாட் செய்வது (மன்னிக்க தமிழில் இல்லா வார்த்தைகள்)
இப்படியாய் நகர்ந்தது பொழுதுகள்.

பெண்ணே
உன்னை முகநூளில் காணாத வரை
தளத்தில் குப்பையாக பலர் இருந்தும்
குப்பைக்கு இடையே பூத்த
அழகிய ரோஜா நீ....!

உன் அகபுத்தகதை
நாளும் பிரித்து படிக்க
உதவிய புறபுத்தகம்
இந்த முகபுத்தகம்..

உன்னை கண்ட நாள் முதல்
அனைத்தும் மாறிப்போனது
விந்தையிலும் விந்தை

கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்
பிறகு பேசலாம் என்கிறது மனம்
நண்பர்கள் அழைபிற்கு

பேசி சிரித்து
கொஞ்சி குலாவி
உன்னோடு
ஆனந்த அரட்டைகள் பல...

அன்பே உனக்கு செவி
கொடுத்து பேசி சிரித்து
எப்பொழுதும் நீ பேசி சிரிப்பதாய்
பேசி சிரிக்கிறேன் தனியாக..

முன்பெல்லாம் உன் வருகைக்காக
காக்க தொடங்கிய நான்
இப்பொழுது நீ இல்லாமலும்
இருப்பதாய் உணவு உறக்கமின்றி
காத்து கிடக்கிறேன் அடிமையாக

அடிமையானது உணக்கா
இல்லை முகநூலுக்கா
என்று தெரியவில்லை

உனக்குள் நான் எனக்குள் நீ
என்பதை
வெளிகொணர்ந்த இடமாயிற்றே
அதெப்படி எளிதில் விலகிட முடியும் .

Comments