மனிதாபிமானம்


இக்காட்சி ஒரு மனித நேயமிக்க இளைஞன் வாழ்விழந்து தவிபோர்களுக்கு உணவு கொடுக்கும் உண்மை சம்பவம். இக்காட்சியை ஒரு ஏழை விவசாயின் குமுறலாய் வெளிபடுத்தி இருக்கிறேன் .
தமிழகத்திற்கு வராது போன நதிக்கரையின் ஓரத்தில் வாழ்விழந்து வசிக்கும் ஏழை விவசாயிகளுக்கு இக்கவிதையை காணிக்கையாக்குகிறேன்.

யார்
நீ.......!
பெற்றோரால் புறகணிக்க பட்டவனா
காதல் தோல்வி யுற்றவனா
மனைவியால் கைவிட பட்டவனா
மகன் மருகளால் விரட்டி அடிக்கபட்டவனா
கொடிய நோயால் விலகி வந்தவனா
வாழ்வே சூன்யமாகி போனவனா
ஏய்ச்சி பிழைக்கும் சோம்பேறியா
சித்தனா இல்லை பித்தனா
யார் நீ...
மனிதா கூறிடு
உன் அவலத்தை
உன் அவஸ்தையை
உன் வாழ்க்கை தடம் மாறி போன காரணத்தை

அய்யா எம் பேரு ஆறுமுகங்க
அஞ்சாறு வருஷமா மழை பெய்யாம
சேத்துல கால் வைக்காம போனதால
சோத்துக்கு வழியற்று கிடக்கறேனுங்க

கண்மாய் ஓரமா மாடு மேய்ச்சி
கறவை தொழிலும் பாத்தேனுங்க
ஆத்துல தண்ணி வராம
அந்த தொழிலும் போச்சுதுங்க

நானும் எம்பொஞ்சாதியும்
நாத்து நட ஆரம்பிச்சா
ஊரே பாத்து
வாய் பொளக்குமுங்க

வந்த பஞ்சத்துல அவளும்
வாய பொளந்துட்டாளுங்க பொறவு
கழனி காட்ட வித்துபுட்டு புள்ளையும் மருமவளும்
கம்பெனிக்கு போயிட்டுதுங்க

மருமவ போகும்போது
மாமா எங்களோட வந்துடுங்கன்னு கூட்டுதுங்க
பாழாபோன மன்ன விட்டு
போகமாட்டேன்னு இந்த உசிரு துடிக்குதுங்க

மன்னிக்கணும் பெரியவரே
சோகத்த உள்ளடக்கி
மாமனிதராக வாழும் தெய்வமே
முதலில் உணவை பிரித்து கவலை
மறந்து உண்ணுங்கள் பிறகு பேசுவோம்

ஏன் தம்பி
எதும்
எலக்ஷன்ல நிக்க போறியா
சாப்பாடு வாங்கி குடுத்து
சன்மானம் எதும் கேப்பியா

அய்யா பெரியவரே எங்க பெரிய
அய்யா காலத்திலிருந்தே உதவி செய்யறோம்
எந்த பலனும்
எதிர்பாராது ....

அய்யோ தம்பி என்ன உங்க
அப்பனா நினைச்சி மன்னிச்சிடு
நான் சொன்னதுக்கும் காரணம்
நானே சொல்லிடுறேன்

ஓட்டு கேட்டவநெல்லாம்
ஓன்ஜாதி ன்னான் .....
சாமி நீதான்னு
சாஷ்டாங்கமா விழுந்தான்

உள்ளுகாரனாச்சே பணம் குடுத்தானே
உண்மையா இருப்பானேன்னு ஓட்டு போட்டோம்
போயி வருஷம் நாலு ஆச்சு
போன இடம் தெரியல

உன்னைபோல யாரும் உதவின்னு செஞ்சாகூட
உள்ளம் மறுக்குதுங்க
இதயம் மறத்து போனதால
இந்த குமுறலுங்க

அதனாலதான் சாமி உன்னையும்
அவன போல எண்ணி வஞ்சு புட்டேன்
தப்பு என்னதுதான் மகராசா மன்னிச்சிடு -நீயும்
தங்கமா தரணியிலே வாழ்ந்திடு.....!

மன்னிப்பையும் வாழ்த்தையும் கேட்டு
நெஞ்சு பதைபதைக்க
நா தழுதழுக்க
வாயில் வார்த்தை வர மறுக்க
இதயம் கனத்து போக

பகட்டு வேஷம் போடும்
பணம் படைத்த சீமான்கள் பலர் இருக்க
குணம் படைத்த
குணசீலன் உணவை ஊட்ட

தாரை தாரையாய் கண்ணீர்
தாத்தாவுக்கு
அவர் அழுகையை கண்ட
அவனுக்கும் செந்நீர் கண்ணீராய்....!!

Comments