ஏற்ற தாழ்வு

பிரம்மன் படைப்பின்
ஒப்பிலா ஓவியங்களாய் திகழும் பறந்து விரிந்த கடல்

பச்சை பசேல் நிலம்அடர்ந்த வனம்
பாய்ந்து ஓடும் நதி
சளைக்காமல் கொட்டும் அருவி,..........

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வன சோலை
வனத்தில் துள்ளி
திரியும் மிருககூட்டம்

நதிக்கரையில் நாகரிகம்
வளர்த்த மனிதகூட்டம்
 உன் அடக்கம் ஆனாலும் 
ஏன் ஏற்ற தாழ்வுகள்
ஏழை -பணக்காரன்
சாதி- அந்தஸ்து
மிருக கூட்டத்தில் இல்லையே
நாகரிகம் வளர்த்த
மனிதன் மட்டும் எங்கே கற்றான்
ஏற்ற தாழ்வு பார்க்க

நாபி கமலத்தில் வீற்றிருபவனே
படைப்பையே தொழிலாய் கொண்டவனே
கருணை கடலே
இது உன் பிழையா இல்லை
அனைவரையும் சமமாக படைத்த நீ
அவனை சுயமாக சிந்திக்க வைத்ததால்
வந்த வினையா......?

Comments