நினைவுகள்

தாய் மடி அமர்ந்து
உண்ட நிலா சோறு
முற்றத்தில் தந்தை தோல்
சாய்ந்து எண்ணிய நட்சத்திரம்

தாயின் அரவணைப்பில்
தூங்கிய தூக்கம்
தம்பி தங்கையோடு சேட்டை
செய்து வாங்கிய அடி

தெரு ஓரங்களில் சக தோழர்களோடு
விளையாடிய விளையாட்டு
மண் கல் கட்டி வைத்து
செய்த வியாபாரம்

மரகிளையில் அமர்ந்து நெடுந்துரம்
செல்வதாய் பேருந்து பயணம்
சக நண்பர்களை ஏற்றி துண்டு
காகிதத்திற்கு கொடுத்த பயணசீட்டு

பச்சை பசேல் வயல்
வரப்பில் ஓடி திரிந்தது
நீரோடையில் நண்பர்களோடு
குதித்து நீந்திய குளியல்

இரவு நிலவொளியில் கண்ட
தெளிந்த நீரோடை
இப்படி பல நிகழ்வுகளை அசை
போட்டுகொண்டே இருக்கலாம்

அது ஒரு கனாக்காலம்
நிச்சயமாய் அது ஒரு
அழகிய நிலாகாலம்தான்

அன்புடன் - சுதர்சன்சுந்தரம்

Comments