அழகிய நிலாகாலம்

நீள் வானம்
கருநீல கடல்
இரண்டிற்குமிடயே
அழகிய நிலவு

நிலவொளியில்
ஆர்ப்பரிக்கும் கடல்
கடலின் நெடுகே மணல் திற்று
கரையை தீண்டி செல்லும் அலை
மிதமாய் வருடும் தென்றல்

ஒவ்வொரு அலைக்கு பின்னும்
நடக்கும் நண்டுகள்
அதை பிடித்து விட துடிக்கும்
சிப்பி தேடும் சிறுவர்கள்

கரை எங்கும் பாய்மர படகுகள்
திட்டு திட்டாய் மீன்வலைகள்
வலை பின்னும் மீனவர்கள்
பிடித்து வரப்பட்ட விற்பனை மீன்கள்
அனைத்து மீனவ வீட்டு வாசலிலும் உலர்மீன்கள்

இது எல்லாவற்றையும் விட
என் காதலியின் கரம் பற்றி நடப்பது
பெரிதாகி போனது விந்தை
கடல்மணலில் வீடு கட்டி
வீட்டிற்கு முற்றம் வைத்து

முற்றத்தில் காதலியின் தோல் சாய்ந்து
கால் நீட்டி அமர்ந்து கொண்டு
பாதம் தொட்டு செல்லும் அலையை
ரசிப்பது தனி அலாதிதான்

நிலவொளி அழகில் கொட்டி வைத்த
வைரங்களாக மின்னும் நீர் கூட
அவளின் விழிகளுக்கு முன்
சொற்பம்தான்

என் காதலியோடு
அளவளாவி கொண்டிருந்தால்
என்னை தொட்டு செல்லும் காற்று
கூட அற்பம்தான்

என்னவளோடு
கழியும் ஒவ்வொரு தருணமும்
அழகிய நிலாகாலம்தான்........

அன்புடன் - சுதர்சன்சுந்தரம்

Comments