அழவைத்தவள் .......நீ

என்னை ஈன்றெடுத்த போது
என் தாய் அழுததாய்
அப்பத்தா எப்போவோ கூறிய ஞாபகம்
அதை தவிர்த்து அவள் அழுது பார்த்ததில்லையே

உன்னை எனக்கு அடையாளம்
காட்டியவளாயிற்றே
குடும்பத்திற்கு ஏற்றவள் என
அங்கீகரித்தவளாயிற்றே

உன்னை மகளாக தானே
பாவித்தார்கள் (மரு) மகளாக
அல்லவே அப்படிப்பட்டவளை
அழவைத்தவள் ....நீ

என் தாயை வஞ்சித்து
வேதனைக்குள்ளாக்கியவளே
தாய் ஸ்பரிசம் என்னவென்று
தெரியாதவளா .....நீ

தாயான போதும்
தாய் பாசம் என்னவென்று
தெரியாது போனதேன்
தாய் மடி வளராதவளா .... நீ

அன்பின் இருப்பிடமாக இருந்தவளாயிற்றே
என் அன்னை
அவளை வன்சொலால் அர்ச்சிக்க
மனம் வந்தது எப்படி.....?

இழிசொல் ஏளனபார்வை இதை எல்லாம்
எங்கே கற்று கொண்டாயடி பெண்ணே
அவ்வளவு
கல்நெஞ்சக்காரியா ......நீ

வன்சொல் பேசுபவரை வன்கொடுமை
சட்டத்தின் பார்வையில் நிறுத்த வேண்டும்
என்றால் முதல் ஆளாக
உன்னைதானடி நிறுத்த வேண்டும்.

என் தாயை மனக்கைதி ஆக்கியவளே
உன்னை சிறைகைதியாய்
பார்க்க பொறுத்துகொள்ளாதடி
என் தாயின் குணம்


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments