காத்திருப்பு

இனிய நண்பன் நம்
இணைய நண்பன்
இணைத்த புகைபடத்திற்கு
காதலுக்கான காத்திருப்பாய்
கூறினால் சுவைதான் - ஆனால்
காதல் தோல்வி
ஒருதலை காதலென
இருவேறு கவிதையில் கூறிவிட்டதால்
கவிபுனைவதெப்படி என
காத்திருந்த வேளையில்
கன நேரத்தில் வந்த காத்திருப்பு
விடியலுக்கான காத்திருப்பு...



தானாய் வந்த
தானே புயலால்
தன் வாழ்விழந்த
தன்னலமற்ற தந்தையை இழந்த
தமிழனின் காத்திருப்பு...

அந்த காத்திருப்பு
பணிக்கான காத்திருப்பு அல்ல
காதலுக்கான காத்திருப்பும் அல்ல
காலனுக்கான காத்திருப்பும் அல்ல ஏழை
விவசாய மைந்தனின்
விடியலுக்கான காத்திருப்பு

அவன் நன்றாக படித்தும்
பணிக்கு செல்லாமல்
இந்தியாவின் முதுகெலும்பான
விவசாயத்தில் புதுமை நிகழ்த்திட
தந்தை வழியில் விவசாயம் மேற்கொண்டான் .

ஆழ உழுதான்
அழகாக விதை விதைத்தான்
விதைக்கு நீர் இட்டான்
செடி வளர களை பறித்தான்
எல்லா இடமும் பசுமைஆக்கினான்

இயற்க்கைக்கு மதிபளித்து
இயற்க்கை உரமிட்டான் பயிர் வளர
அறுவடை தருணம் வரை
எல்லாவற்றுக்கும் கடன் பட்டான்

பயிர்களின் வளர்ச்சியை கண்டு
கடன் தீர்ந்திடும் என அகமகிழ்ந்தான்
எல்லாவற்றுக்கும் முட்டுகட்டையாய்
வந்தது இயற்கை சீற்றம் .

கருமேகங்கள் ஒன்றாய் திரண்டு
பெருமழை பெருவெள்ளம்
பெரும்புயல் வந்து
பசுமை மரங்கள் பட்டமரமாகிட
பயிர்கள் நீரில் மூழ்கிட...

அல்லும் பகலும்
அயராது உழைத்தும்
அறுவடை முடிக்காமல் போனோமென
அல்லலுற்றான் ..

நீர் வடிந்தால் அறுவடை நிகழ்திடலாமென
நீரை வடிகாலுக்கு வெட்டி விட்டான்
நீரும் வடியவில்லை
நித்தம் அவன் வாழ்வும் விடியவில்லை

ஆராய்ந்தான் நீர் வடியாத காரணத்தை
மேட்டுகுடிகள் வாய்க்காலை ஆக்கிரமித்ததன் விளைவு
சிந்தித்தான் திட்டம் தீட்டினான்
சந்தித்தான் அரசு அதிகாரியை
மனு கொடுத்தான் அரசுக்கு.

அதிகாரிகளும், அரசியலாளர்களும்
திட்டம் தாம்
தீட்டியதாய் பிதற்ற
திட்டம் தொடங்கியது

நூறு நாள் வேலை நாளொன்றுக்கு
நூறு ரூபாய் சம்பளம்
திட்டம் யார் தீட்டினால் என்ன நம்
திண்டாட்டம் குறைந்தால் சரி

அங்கும் வந்தது ஆபத்து
மேட்டுகுடிகள் தாங்களும் வேலையில்
ஈடுபடுவதாய் சொல்ல
நமக்கு வேலை நடந்தால் போதுமென நம்பினான்

வந்த மேட்டுகுடிகள் வேலை செய்யம்மல்
அதிகாரியோடும்
அரசியல்வாதியோடும் பேரம் முடிதிட்டார்கள்
எனக்கு 60 உனக்கு 40

அரசுக்கு தெரிவிப்பதெப்படி அதிகாரி பயந்தான்
அரசே நாங்கள்தான் என்றான்
அரசியல்வாதி அவன் அரசியல்வியாதி
அடி பணிந்தான் அதிகாரி

வெட்டாத வாய்க்காலை வெட்டிவிட்டதாய்
கோப்பு தயாரித்தான் அதிகாரி
பணக்கார மேட்டுக்குடி கையெழுத்திட
பாமரனுக்கு கைநாட்டை தவிர வேறு என்ன தெரியும்

பாமரன் எதற்கு கைநாட்டு என்றான்
பணபட்டுவாடா ரசீதென
பாங்காய் தெரிவித்தான் அதிகாரி
பாவப்பட்டவன் ஏதும் விளங்காமல் கைநாட்டிட்டான்.

ஒவ்வொரு ஆண்டும் வாய்க்கால்
வெட்டுவதாய் திட்டம் நடக்கும்
தூர்ந்து போன வாய்க்காலை
தூர் வாருவதாய் ஆனால்

வாய்க்காலும் வெட்டியபாடில்லை நீரும்
வடிந்தபாடில்லை
வாய்க்கால் புதுபித்த்துவிட்டதாக
வருடா வருடம் அரங்கேறும் அரசின் கோப்புகளில்

பிரிந்து சென்ற காதலியின்
நினைவுகளை காதலன்
அசைபோடுவது போல்
கலங்கி காத்திருந்தான் கடன்பட்டவன்

விடியல் வெகுதொலைவில் இல்லை
விடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்
காத்திருந்தான்விடியலை நோக்கி.

Comments