கடிதம்

கண்ணே கனியமுதே
முத்தே என் முத்தான சொத்தே
வடிவே வடிவழகே
நான் சுகம் நீ சுகமா
நம் உறவுகள் சுகமா..?

உறவுகள் ஆங்காங்கே
சிதறி போனதையும் அறிந்தேன்,
சிதைக்க பட்டத்தையும் அறிந்தேன்,
உள்ளம் கொதிக்கிறது
உறவுகளை ஒன்று திரட்டி கூடி வாழ்

என்னுயிரே
உன்னவன் வருகைக்காய் காத்திரு
உன் மன்னவன் போர் முனையில்
போராளியாய்......

அண்ணிய மண்ணில் அகதியாகவும்
அடிமையாகவும் வாழ்க்கையை துவங்க
அடியவனுக்கு துளியும் விருப்பம் இல்லை
அதற்காக வாழ்வை தொலைத்திட முடிவு செய்துவிட்டோம்

போர்முனையில்
நல்ல முன்னேற்றம் கண்ட வேளையில்
நல்லதோர் செய்தி கிடைக்கும் தருவாயில்
அண்ணிய படை நம் எதிரிக்கு ஆதரவாக
அதற்கும் நம் படை வீரர்கள் அஞ்சவில்லை

போராட்டக்காரர்கள் எதற்கும் சளைக்கவில்லை
போர் படையை கண்டும் மலைக்கவில்லை
இதுவரையில் காலன் என்னை அழைக்கவில்லை
இங்கு நம் குளம் தழைக்க வழியும் இல்லை

தமிழனுக்கு மாற்று தமிழனென நம்பிய
தருணத்தில் தமிழனே ஏமாற்றுகாரனாய்,
துரோகியாய் கண்டும் மனதில்
துளியும் வருத்தமில்லை

போராளியாய் துப்பாக்கி தோட்டாவில் துவங்கிய
போராட்டம் பீரங்கி டாங்கி என அடுத்தடுத்த பரிணாமம்
அனைத்திலும் அடைந்த வெற்றியில்
அடுத்த பதவிஉயர்வு அண்ணலுக்கு மனிதவெடிகுண்டு

என் ஒவ்வொரு தருணமும் மரணமும்
உனக்கு மட்டும்தான் நினைத்தவன்
நம் இனத்திற்காக உயிரிடும் தருணத்தை
எண்ணி அகமகிழ்கிறேன்

இறுதி கட்ட போரை நோக்கி நான்
இதில் வெற்றி என்றால் எனக்காய் காத்திரு
எதுவரை காத்திருப்பது என்கிறாயா ?
உன்னை வாசம் செய்யும் தருணம் வரை
சுதந்திர காற்றை சுவாசிக்கும் வரை

எப்பொழுது சுதந்திர காற்று என்கிறாயா?
எத்துனை காலமென தெரியவில்லை
இன்னுயிர் பலர் நீத்தும்
ஈழம் மலர்ந்திடும் என்ற நம்பிக்கையில்
இம்மியளவு கூட பிசகாமல் நம் வீரர்கள்.

வெற்றி செய்தி எட்டவில்லைஎனில்
எட்டி இருப்பேன் காலனை பிறகு
எனக்காய் கலங்காதே, காத்திராதே
மனம் முடித்து கொள் விரைவில்
மழலை செல்வதை பெற்று கொள்.

மன வேதனைதான் சொல்வதற்கு
இதயமே ரணம்தான்,
இருபினும் நம்மினம் காக்க
போராளி வேண்டும் நினைவில் கொள்

உன் நினைவுகளில் சுழல்வதே
ஆ இதமாக இருப்பதால்
ஆயுதத்தை மறந்து போகிறேன்

அன்பே எனக்கு
அதனினும் பெரிய
ஆயுதங்களை சுமக்க வேண்டியதால்
விளைமதிபற்ற நினைவுகளை 
விட்டுசெல்கிறேன்
ஆசை முத்தங்களுடன் அன்பு காதலன்........

அவள் கடிதம் கண்டாள்
கற்றாள் கலங்கினாள்
கண்களில் உதிரம் கசிய
உள்ளம் உருகினாள்.........
அழும் அவளை கண்டும்
தேற்ற முடியாமல் கலங்கினான்
காற்றில் கலந்து போனவன் ......!

Comments