வளர்ச்சியா - வீழ்ச்சியாவிஞ்ஞான வளர்ச்சி!
விவசாயத்தின் வீழ்ச்சி........
அது அயல்நாட்டின் சூழ்ச்சி.......?

பொக்ரானில் அணுசோதனை வெற்றி என்றதும்
பொறுத்துகொள்ளாத அயல்நாட்டினர்
பொருப்பாய் விதித்தனர்
பொருளாதார தடை......

எவருக்கும் இது தெரியகூடாதென
எளியவர் தன்னிறைவு பெரும்வரை
ஏற்றுமதிக்கு தடையென
எமது அரசு அறிவித்தது.

விதித்த தடையால் .....
விழுந்து விடவில்லை மிக விரைவாக
எழுந்தோம் விவசாயத்தால்.....
விழுந்துடுவோமெனும் அயல் நாட்டின் கூற்றை
விவசாயம் பொய்யாக்கியது.

எப்படி எழுந்தது தடை விதித்தும் ?
ஆராய்ந்தனர் அயல்நாட்டினர்
இந்தியாவின் வளம் வனாந்திர காடுகளும்
இயற்க்கை விவசாயமும் என்பதை தெரிந்து கொண்டனர்.

எழுந்ததை அறிந்த அயல்நாட்டினர்
அழிக்க பெரிதொரு சூழ்ச்சி செய்து
தொழில் முனைவோம் என்ற பெயரில்
தொழிற்சாலைகளை களமிறக்கினர்.

வெள்ளையரிடம் அடிமையாக இருந்து
வாங்கிய சுதந்திரத்தை அயல்நாட்டு
கொள்ளையரிடம் அடகு வைத்தனர்
அரசை வழிநடத்துபவர்கள்..

தரிசு நிலம் எவ்வளவோ இருந்தும்
தழைக்கும் விளைநிலங்களும்
தளிர்க்கும் காடுகளும்
தகுதியான இடமென்றனர்.

வளங்கொழிக்க இதுதான் சரியான
வழியென வனங்களில்
உள்ள மரங்களை வெட்டினர்
வளமிழக்க போகிறோம் என்பதை அறியாமல் ...

விவசாயத்தை நம்பியிருப்பவர்
வீதிக்கு வருவதா என கொந்தளிக்க
அனைவருக்கும் வேலை உண்டு என்றதும்
அடங்கி போயினர் விவரமற்றோர்.

முதலாளிகளை தொழிலாளி ஆக்கியதொடல்லாமல்
முழு மூச்சாய்விவசாயத்தை அழித்ததொடல்லாமல்
தொழிற்சாலை கழிவுகளை
தக்க பாதுகாப்பின்றி வெளியேற்றினர்.

தொழிற்சாலை மாற்றம்
தந்ததா என்றால்?
எண்ணிலடங்கா மாற்றங்கள்
தந்தது கழிவு பொருட்களால்.......

கழிவுகளால் வளங்கொழிக்கும் இடங்கள்
குப்பையும் கூளமுமாக, சேரும் சகதியுமாக........

விலையுர்ந்த விளைநிலங்கள்
விலைமதிப்பற்ற களை நிலங்களாக........

ஜீவநதியாக ஓடிய ஆறுகள் எல்லாம்
மாசு நிறைந்த கூவநதியாக......

தடை செய்யப்பட்ட வாயுக்களை பயன்படுத்துவதால்
வாயுமண்டலமே மாசாக........

இயற்கையில் மணம்வீசிய இடங்கள்
செயற்கையால் துர்நாற்றம் வீசும் இடங்களாக....

நிறைய மாற்றங்கள்
நல்ல மாற்றத்திற்காய் காத்திருந்தவர்களுக்கு
மாசுபட்ட நீராலும், வாயுவாலும்,
புதியது புதியதாய் நோய்களும்
விஷகாய்ச்சலும்தான் மிச்சம்......

அரசை வழி நடத்துபவனும்,
அயல்நாட்டவனும் செய்யும்
அக்கிரமங்கள் அனைத்திற்கும் ஒரு
முடிவு வேண்டி நல்ல
விடிவு வேண்டி
தொலைதூரத்தில் இருந்தே காண்கிறேன்
தொலைநோக்கு பார்வையுடன்.....??

Comments

 1. வணக்கம்

  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

Post a Comment