விழித்திடு சகோதரியே ...!



அன்பு தங்கையே.....! என் வீட்டு
அல்லி  ராணியே...!
ஆழ்நிலை உறக்கம் ஏனோ?
அதிகம் படித்துவிட்டோம் என்று 
அலுத்து போனாயா ?
அகிலத்தில் நீ படிக்க வேண்டியது 
அதிகம் இருக்க 
அதற்குள் கலைத்து போனாதேன்?
 ஆரம்ப பாடமே முடித்தபாடில்லை 
அப்படி இருக்க  உறக்கம் ஏன்?
அகிலத்தை எப்படி  வென்றிடலாமென 
ஆழ்ந்த சிந்தனையா சகோதரியே.....!

 அதிகம் படித்தாலும் 
அசட்டை செய்யும் உலகை 
அலட்டிகொள்ளாமல் 
அகிலம் போற்றும் அளவிற்கு 
அசுர வளர்ச்சி பெற  
அகர படிப்பு மட்டும் போதாது 
அனுபவ படிப்பும் தேவை,
அரசை வழிநடத்தும் 
அரசியல் அறிவும்,
ஆராய்ச்சி மேற்கொள்ளும் 
அறிவியல் அறிவும்,
அனைத்தும் திறம்பட செயலாக்கும் 
அதிகார தோரணையும் தேவை  சகோதரியே .....!

அணங்காய் பிறந்தவளை 
அலைபேசி முதல் 
அலைவழியாய் வரும் 
அத்தனை விளம்பரங்களிலும்
அவளை போக பொருளாய்  
அசிங்கமாய் சித்தரிப்பதும்,
அடுக்கடுக்காய் வரும் தொடர் 
அத்தனையிலும் பெண் 
அழுவதற்குதான் என்கிற 
அளவிற்கு அசிங்கங்களை 
அரங்கேற்றும் சமூகத்தில் 
அறிமுகமானவளே 
அக்கரைகளை களைய
அக்கறை கொண்டு 
அவலத்தை போக்க விழித்தெழு சகோதரியே...!

அன்பே உருவான 
அன்னைதெரசா 
அஹிம்சையை  கடைபிடித்த 
அண்ணல் காந்தி 
அறிவின் ஜீவி 
 அறிஞர் அண்ணா,
அரசியலமைப்பு தந்த 
அம்பேத்கர்,
அரசியலில் அதிகாரம் படைத்த 
அன்னை இந்திரா,
அகிலமே வியந்து பார்க்கும் 
அப்துல்கலாம், இப்படி 
அறிஞர்கள் பலரும் போதித்த 
அறிவுரைகளை கடைபிடித்து 
அகிலம் போற்ற வாழ
அயர்ந்திடாமல் துயில் களைந்திடு  சகோதரியே..!

அபூர்வமான இப்பிறவியை,
அற்புதமான இப்பிறவியை,
அற்ப பிறவியாக்காமல் 
அர்த்தமுள்ள பிறவியாய்  ஆக்கிட 
அவகாசம் இல்லாமல் சாவகாசமாய்,
அவசரம் கொள்ளாமல் நிதானமாய்,
அனுகுவாய் எனில் 
அவஸ்தை இல்லாத
அட்டகாசமான எதிர்காலமுண்டு சகோதரியே...! 

Comments