உயிரோவியம்



கண்ணே ..!
கனவில்  இதுவரையிலும்
உன் பாதம்  தவிர்த்து புற அழகை
கண்டதில்லை, கள்வன்போல்
கள்ளத்தனமாய் கண் கொட்டாமல் நான்
காண்பதை நீ கண்டு  எங்கு
கிட்டாமல் பொய் விடுவாயென  அஞ்சியே
கண்காளால் ஊடுருவ அச்சம் கொண்டு
கனவினில் கண்குளிர கண்ட
கன்னியின் பாதத்தை
கற்பனை குதிரையை தட்டி
உயிரோவியமாக்க என்னாலான முயற்சி......!!

கட்டி கரும்பும், கணியமுதமுமாய்
விளங்குகிற கட்டழகு கன்னியின்
கட்டுடல் போர்த்திய
பளபளக்கும் பட்டு ஆடையும்,
உன் பாதம்  சேரவே காத்து கிடந்தாற்போல் 
சிறு அருவியாய் கொட்டும் நீரும்,
கொட்டும் நீர் பாதம் பட்டதால்
நீருக்குக் ஏற்பட்ட  சிலிர்ப்பும்,

பளபளக்கும் உன் பொன்னிற மேனியில்
பட்டு தெறிக்கும் நீர் கண்ணாடியின்
பிம்பம் போல் தகதகத்து
விலகி செல்லும் ஒ(லி)ளிசிதரல்களும் ,

உன்னடி சேர்ந்திட அனைவரும்
காத்துகிடக்கும்போது   நாமும் சேர்ந்திடலாமென
பாதம் பட்டு சென்ற நீர் தொட்டு செல்லட்டுமென
வாஞ்சையுடன் சிதறி கிடக்கும் மலர்களும்,

உன் பாதத்தோடு ஒட்டி உறவாட
உரிமை கோரி சங்கிலிபோல்  பிணைத்துகொண்டு
பட்டு பாதம் மின்ன அழகாய்
இட்ட இருவரி பட்டடையும,

உன் நடையின் அசைவிர்கேற்றாற்போல்
பட்டடையில் அடுக்கடுக்காய்
இட்ட முத்துகள் தகதகக்கும்  மேனியை
தீண்டுவதால் உயிர்த்தெழும் இசையும்,

உன் மேனியை தீண்டி  முத்துகள் ஏற்படுத்தும்
நாதமே எனக்கான  உயிர் துடிப்பெனும்போது  ,
சர்வகாலமும்  கண் இமைக்காமல்
கண்டும்  கேட்டும்  ரசித்திடுவேன்......!

உன் கார் கூந்தல் கொட்டும் அருவியோ,
உன் நெற்றி கவிழ்த்து வைத்த பிறைநிலவோ, 
உன் விழிகள் கண்டவுடன்
மையல் கொள்ளும் மயில் விழியோ,
உன் நாசி துவாரம் கிளியின் துவாரமோ,
உன் செவ்விதழ் கொவ்வைப்பழமோ,
உன் பற்கள் வரிசையாய்
அடுக்கி வைத்த முத்துகளோ,
உன் அங்கம் மின்னும் தங்கமோ, 
உன் இடை கொடி  இடையோ,
உன் முழுவுருவும் அறியவில்லை.........?

உன் ஒரே ஒரு கேசம் ,
உன் ஒரு நகத்தை வைத்து
உன்னை உயிர் சிற்பமாய்
உருவாக்கிட  உன்னவன்
உலக புகழ்  ரவிவர்மன் இல்லையே....!

சர்வ லட்சணமும் பொருந்திய
பொன்னிற மேனியையும்
மென்மையும் பொருந்திய  பாதமுடைய
கட்டழகியான  உன்னை
வட்ட நெற்றியில்பொட்டிட்டு,
திருமாங்கல்யம் இட்டு
கரம் பற்றி என் இதய
கூட்டிற்குள் சேர்த்த பின்
கந்தர்வர்களும் கண்டு வியக்கும்
கட்டி கரும்பின்  அழகை
கனவினில் கள்வன் போல் காணாமல்
கண்குளிர கணவனாய் கண்டு ரசித்து
கற்சிலையாய் வடித்திட காத்திருக்கிறேன்...!! 

Comments