ftc aniversery

நண்பர்களுடன் பழகி
நட்பு பாராட்டிட
வலைத்தளத்தில் வளையிட்டு
தேடியதில் நல்ல தமிழ் அரட்டையில்
நல்லதோர் அறிமுகம்
ஸ்வேதா, கிருஷ்ணா மற்றும் பொம்மி,
மூவரும்  நல்ல நண்பர்கள்.
அவ்வரட்டையிலேயே சுபா
அறிமுகம் என்றாலும்
அதிகமாய் பழகியதில்லை.....

 அத்தளம் எகாரனாத்தாலோ  முடங்கி போக
அந்த நட்பை எங்கெங்கோ தேடி
புதிய நண்பர்களின் இதயத்தில்
இணைந்திட  இணைந்த தளம்
இனிய தளமான நண்பர்கள் இனையதளம்
இத்தளத்திலும் அவர்களை
இனங்கண்டு  நட்பு தொடர  வாய்பளித்த தளம்....!!

நம் வாழ்வில் ஏற்படும் சுகதுக்கங்களை
பகிர ரகசியமான சிநேகிதர்களை
ஏற்படுத்திய தளம் ...
முகம் பாராமல், முகவரி தெரியாமல்
முன் இருக்கும் பெயரை மட்டும் கண்டு
பேசி சிரித்து அனுதினமும்
பொழுதை கழித்த தளம்......!!

அடியவனுக்கு தம்பிகள் இருவர் இருக்க
தங்கை இல்லை என்ற
மனக்குறையை  போக்கிய தளம் ....!
பல நாட்களில் தூக்கத்தை
தொலைத்தாலும் புதியதாய் நண்பர்கள்
கிடைத்த திருப்தி மட்டும் இல்லை
பல புதிய உறவுகள் கிடைத்த திருப்தி
அன்போடும், பாசத்தோடும்
அண்ணாவென்று அழைத்திடும்
பவித்ரா, சிந்து, ஸ்ருதி, கார்த்திகா என
பல தங்கைகள் இதில்
ரகசியத்தையே  பெயராய் கொண்ட
ரகசிய தங்கையும் அடக்கம்....!


சிறு சிறு மனகசப்புகள் வந்தாலும்
சில நாட்களிலேயே மறந்து 
சில பல  ரகசியங்களை பரிமாறி கொள்ளவும்
சிந்திக்க பல தகவல்களை
தன்னகத்தே கொண்ட தளம் .....!

இத்தலத்திற்கு நேற்றோடு முதலாண்டு முடிந்து
இன்று அகவை இரண்டில் அடிவைக்கும்
இதயங்களை இணைத்திடும்
இணையம் மென்மேலும் வளர்ச்சியில் சிறந்து
இன்று போல் என்றும் நண்பர்கள்
அனைவரும் மனகசப்பின்றி
நட்பை தொடர நண்பர்கள் இணையத்தோடு
இணைந்த நண்பர்களுக்கும், 
இணைய விருக்கும் நண்பர்களுக்கும்,
இதயங்களை இணைக்கும்
இணையத்திற்கும்  வாழ்த்துக்கள் .....!!

Comments