ஆதி முதல் அந்தம் வரை

 ஆதி மனிதன் ஆதிசக்தியின் அம்சம் என்றும்,
ஆதாமும்  ஏவாளும்  தான்
ஆண்டவனின் முதல் படைப்பு என்றும் முழங்க
ஆதிமனிதன் தோன்றியது என்னவோ
அணுக்களால் தான்........!

அண்டம் தோன்றிய நாளில்
அணுக்கள் பல ஒன்று சேர்ந்து
புழு பூச்சியாய் தொடங்கி
பரிணாம வளர்ச்சி கண்டு குரங்காகவும்,
குரங்கிலிருந்து மனிதனாகவும்
மாறினான் என்கிறது அறிவியல்....!

மந்தியாய் இருந்து மனிதனாய்
மாறிய பின் உன்ன உனவில்லாமல்
உடுத்த உடை இல்லாமல்
உறங்க இருப்பிடமில்லாமல்
கானகமெங்கும் நாடோடியாய் திரிந்தாய்....

கற்காலத்தில்  தன்  வாழ்வை மேற்கொள்ள
கொடிய விலங்குகளை கொன்றாய் ,
கற்களை உரசி தீயை உருவாக்கினாய்,
கொன்ற விலங்கை தீயிலிட்டு உணவாய்  கொண்டாய்...

கானகத்தில் கிடைக்கும்
காய் கனிகளை பசிக்கு புசித்தாய்,
காணும் பெண்களை எல்லாம்
கண்ட இடங்களில் உறவு கொண்டாய்......

விலங்குகளை போல் உறவு கண்டதன்
விளைவு தன் இனத்தையே போட்டியின்
காரணமாக அழிக்க துவங்கினாய் .....

கால சக்கரம் சுழல, சுழல தனக்கென
கோட்பாடுகளை  விதித்து கொண்டு
குகைகளிலும்,  குடில் அமைத்தும்
குடும்பமாக வாழ துவங்கினாய் ..

ஐந்தறிவு மாக்களாய் அறிவிலியாக இருந்த நீ
ஆறரிவு மக்களாய் அறிவியல் வளர்ச்சி கண்டு
சமவெளி பகுதியில்  வேளாண்மை செய்தாய்,
சாதுவான விலங்குகளை வளர்த்தாய்.......

மந்தியாய் வாழ்ந்த வரை மகத்துவமாய் வாழ்ந்த நீ 
மானிடனாய் என்று மாறீனாயோ   அன்றே
மானுடம் மறந்தாய் ......
மாந்தரோடு ஒட்டி உறவாடும் வாழ்வை மறந்தாய்...
மனம் முழுதும் மாசுகள் கொண்டாய்

தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள
பண்ட, பாத்திரங்களையும்
புதியது புதியதாய் ஆயுதங்களையும்
இயந்திரங்களையும் கண்டுபிடித்தாய்

ஆக்க சக்திக்காக உருவாக்கிய உன்
அறிய கண்டுபிடிப்புகள் அனைத்திலும்
ஆற்றல் இருப்பதை போல்
அழிவும்  இருப்பதை மறந்தாய்.....,

அணுவிலிருந்து தோன்றிய  நீ
அணுவின் துகள்களை கொண்டு பல
அறிய கண்டுபிடிப்புகளை உண்டாக்கினாய் ,
ஆகாய விமானம் முதல் அணுகுண்டு வரை
உன்னுடைய கண்டுபிடிப்புகள் ஏராளம் ....!!

உடல் உழைப்பை குறைக்க இயந்திரங்களை
உருவாக்கிய நாட்களில் உருவ வளர்ச்சிகண்டாய்
அதை பயன்படுத்த துவங்கிய நாள் முதல்
உடல் வளர்ச்சியில் குன்றி கொண்டிருக்கிறாயே ....?
 
கனபொழுதில் வேலையை செய்து முடிக்க நீ
கண்ட கண்டுபிடிப்புகளில் ஒன்றான
கணிப்பொறியை நாட ஆரம்பித்தபின்
கண்கொட்டாமல் கணினிமுன்னேயே
காத்து கொண்டிருக்கிறாயே....?
உடல் உருக்குலைந்தும் காலம் மறந்து ...!!

தற்கால உன்  வாழ்வை ஒளிமயமான
பொற்கால வாழ்வாக அமைக்க வளர்சசியில்லா
கற்காலத்தில் நீ கண்ட முதல் கண்டுபிடிப்பான
கற்களால் ஆன கூரிய ஆயுதத்தையும் , சக்கரத்தையும்
உருவாக்க நீ சோதனையும்,
வேதனையும்  அடைந்திருந்தாலும்
உன் சாதனையை எடுத்தியம்ப இது  ஒன்று போதுமே.....!!

Comments