முயற்சி திருவினையாக்கும்


ஊர் போற்றும் மிராசுவாய் வாழ்ந்தவர்கள்- தன்
அறியாமையாலும், படிப்பறி வின்மையாலும்
நரிமுகம் கொண்ட நயவஞ்சக பேய்களால்
நடுத்தெருவிற்க்கு தள்ளபட்டார்கள்.....?

நிலையில்லா நாடோடி வாழ்வை மேற்கொண்டு
வீதியோர மேடைகளையும்,
விருத்ஷமான மரங்களையும்
உறைவிடமாய் கொண்டு........

உன்ன உணவின்றி, உடுக்க உடையின்றி
இரண்டாந்தர வாழ்க்கை அல்ல
அதற்கும் கீழ்த்தர வாழ்க்கை
வாழ்ந்தவர்கள் என் முன்னோர்....

தன்  பதின் வயது வரை
கிழிசலான கந்தையோடு
மேய்ப்பாலானாக வாழ்ந்தவர்
என் தந்தை......

படிக்க ஆவல் கொண்டு
பெற்றோரை நாட, அவர்கள்
இல்லாத நிலையை கூறி
இயலாமையை வெளிபடுத்த.....

இல்லாமை நிலையை கருத்தில் கொண்டு
தன் சகோதரனின் துணையை நாடி
பள்ளியில் சேர்ந்து ஆண்டிற்கு
இரண்டு வகுப்பென தேர்ச்சிபெற்று....

படிபறிவின்மையால் தான்
இந்நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதால்
படிப்பறிவை  போதிக்கும்
ஆசிரிய படிப்பை தேர்வு செய்து......

ஆசிரிய படிப்பில் முதல் வகுப்பில் தேர்ந்து
ஆசிரிய பணியில் தன்னை
அற்பனித்துகொண்டு
பணிக்கு சென்றபின்  சிறுக சேமித்து......

எவ்வூரில் இருந்து விரட்டியடித்தார்களோ
அவ்வூரிலேயே தனக்கென இருப்பிடம் அமைத்து
நிலம் நீரென வசதியான வாழ்வை வாழ்ந்தாலும்
நாங்கள் செய்யும் சிறு தவறுகளை சுட்டி
தன் பழைய வாழ்வை நினைவுகூர்வார்.....!

சாலையில் செல்லும் பொது
சாலையோரமாய் வாழும் குடும்பங்களை
காணும்போது அவரவர் எதனால்
இந்நிலைக்கு தள்ளபட்டார்களோ....

என நினைத்துபார்க்கையில்
என் முன்னோரின் வாழ்க்கை
கண்முன் நிழலாடி
நெஞ்சம் கனத்து போகும் ......!!

Comments