குலம் தழைத்திட

குழந்தைகள் குறும்பாய்
குதித்து விளையாடும்  இளங்கன்றை
குளிர்ந்த நீரில் குதுகலமாய்
குளிக்கவைப்பதன் பின்னணி
குலமகளாம் தைமகளை  வரவேற்று 
குடும்ப சகிதமாய் கொண்டாடி மகிழும்
குதூகலமிக்க  பொங்கல் விழாவில்
குலமாதவை குளிக்க வைத்து
குடும்பங்கள் யாவும் ஒன்றிணைந்து
குலம் தழைத்திட
குடத்தில் பச்சரிசி இட்டு
குமுறும் தணலில் வேக வைத்து
குழைந்து பொங்கி வரும்போது
குதுகலமாய் பொங்கலோ பொங்கலென கூவி
குலதெய்வத்திற்கு படையலிட்டு
குங்கும திலகமிட்டு
குவித்து வைத்த பசும்புல்லும் படையலில்
கும்பமிட்ட பொங்கலும்
குலமாதவிற்கு குடுத்து மகிழ்வர்.....!!

குடியானவர்கள் நமக்கு விட்டு சென்ற 
குடும்ப விழாக்களும் பண்டிகையும் 
குடும்பமாய் குதுகளிக்கவும்,
கும்மாளமிடவும்  தான்   என்பது 
குடியிருப்பில் குடியேறிய நகரவாசிகளிடம் 
குறைந்து  வருவதன் காரணம்
குறுகிய மனபான்மையோடு வாழ்வதே.....!!

குடியிருப்பில் குடியேறிய நகரவாசிகள்
குறுகிய மனப்பான்மையோடு வாழாமல்
குட்டி செல்லங்களுக்கு உதாரணமாய் இருந்து
குடியானவர்கள் நமக்காக  விட்டு சென்ற
குடும்ப விழாக்கள்  பற்றிய
குறிப்புகளை இளம் தலைமுறைக்கு
குறிப்பு உணர்த்துவீர்கள்  எனில்
குலம் செழிக்கும் .......!!

Comments