உழவனுக்கு ஓர் விழா


உழவன் கணக்கிட்டால் 
குடிகூலியும் மிஞ்சாதென தெரிந்தும் 

உலகத்தார் பசி தீர்த்திட 
உதவும்  உழவனுக்கு
உழைக்கும் வர்கத்திற்க்கு
உழைத்து களைத்த உழவன்   
உள்ளம் களிக்க

உவகையுடன் கொண்டாடும் 
ஓரே  விழா  பொங்கல் விழா......!!

சேற்று விளையாடி 
நாற்றாங்கால் தயார் செய்து 
ஆடியில் விதை விதைத்து 
ஆவணியில்  ஆழ உழுது 
வயல் வரப்பை செப்பனிட்டு 
நாற்று நட்டு வைத்து 
நேரா நேரத்திற்கு நீரிட்டு  
ஐப்பசியில் களைபரித்து 
நன்கு விளைந்த நெல்லை  
மாதங்களின்  இறுதியாம்
மார்கழியில் அறுவடை முடித்து  
விளைச்சலுக்கு உதவிய 
இயற்கைக்கும், கால்நடைக்கும்
போட்டதை பொன்னாக்கும் பூமி தாயிற்க்கும்,
செங்கதிரோன் சூரியனுக்கும் 
நன்றி  நவிலும் விதமாக
தை முதல்  தேதியாம் 
மங்கள நன்னாளில் 
கதிரவன் முன்னிலையில்
மஞ்சள் கட்டிய புதுப்பானையில்
புத்தரிசியிட்டு, சிதைமூட்டி 
பச்சரிசியை பக்குவமாய் வேகவைத்து 
பாலோடு, ஏலக்காய், வெல்லம், முந்திரி,
நெய் சேர்த்து பொங்கிவரும்போது 
பொங்கலோ பொங்கலென 
ஆனந்தமாய் களிகூத்தாடி
கரும்பு முதலான விளை பொருட்களை 
கதிரவனுக்கு படையலிட்டு  மகிழ்வர்....!!

தமிழுள்ளம்  கொண்ட உறவுகளே 
நுனிகரும்பின் உவர்ப்பை போல் உழைப்பும் 
அடிகரும்பின் இனிப்பைபோல் 
உழைப்பின் பலனும் பெற்று 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட 
இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்......!!

Comments