நட்பு


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு - குறள் 

பொருள்: அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது மானம் காக்க கைகள் எவ்வாறு உதவுகின்றனவோ அதுபோல துன்பம் வரும் வேளையில் நட்பிற்கு தீங்கு ஏற்படாமல் காப்பதே  உண்மையான நட்பு.


கல்வி சாலைகளில்
கவலையின்றி துள்ளித்திரிந்த
காளையர் கூட்டம் நாங்கள்........

சாதிமத பேதமின்றி
சகலரும் சாதித்திடவே
சைன்யமானவர்கள் நாங்கள்........

ஆணும், பெண்ணும், 
இன வேறுபாடின்றி  எவ்வித
இடஒதுக்கீடுமின்றி  ஒன்றாய்
பழகியவர்கள் நாங்கள்.....

தோல் தொட்ட நண்பர்கள்
வான் முட்ட  வளர்வதை கண்டு
போட்டி, பொறாமையின்றி
ஆனந்தபட்டவர்கள் நாங்கள்.....

நண்பர்கள்  பெருகின்ற வெற்றியை
நாமே பெற்றதாய் எண்ணி
நகைத்து மகிழ்ந்தவர்கள்  நாங்கள்..

தோல்வி கண்டது  நண்பனாயினும்
தனக்கே நிகழ்ந்ததாய் எண்ணி
துயருற்றவர்கள் நாங்கள்....

தோல்வியை கண்டு துவண்டிடாமல்
வெற்றியின் சிகரத்தை எட்டிட  மீண்டும்
முயற்சிக்கும் பீனிக்ஸ் பறவைகள் நாங்கள்

போற்றுவதும், தூற்றுவதும்
எங்களுக்குள் சகஜம் என்றாலும்
பிறர் தூற்ற அனுமதிகாதவர்கள் நாங்கள்...

உண்மையில் அனைவரும்
உறவில்லை எனினும்
உறவுகளாய் வாழ்ந்தவர்கள் நாங்கள்...

நண்பர்களின் இதயத்தில் வசித்து
அவர்களின் எண்ணங்களை வாசித்து
நட்பை சுவாசித்தவர்கள் நாங்கள்....

தேர்வில் வெற்றி பெற உந்துசக்தியாய்
துவங்கிய எண்களின் நட்பு 
வாழ்வை துவக்கிய நாட்களிலும்  
ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காதவர்கள்  நாங்கள்..

செம்மையான நட்பு மேலும் 
செழுமை பெற்று வாழ்வில் வளம்பெற 
வழிகாட்டிகளாய்  உதவுபவர்கள் நாங்கள்....!!

நட்பிற்காக ஒருவரை ஒருவர் 
காணாமலே வடக்கிருந்து உயிர்துறந்த 
நட்பின் சிகரம் பிசிராந்தையாரை  போல் 
நட்பிற்கு இலக்கணமாய் வாழ 
முயற்சிபவர்கள் நாங்கள்......!!

Comments