கிறுக்கு தனமாய் ஒரு கிறுக்கல்...!

கிறுக்குத்தனமாய் ஒரு கிறுக்கல்......!
கன்னியரும் காளையரும் நகராதபடி
கிறங்கடிக்கும் இணையத்திற்கு வாழ்த்துரைக்க
கிறுக்கு தனமாய் ஒரு கிறுக்கல்...!

கிறக்கமாய் எப்பொழுதும்  இணக்கமாய்
கிறக்கத்தின் உச்சியில் காத்து கிடக்கும்
கிறுக்கு நண்பர்களுக்கு
நறுக்காய் சிலவார்த்தை

நட்பின் வலைத்தளம் உதவியால்
நட்பை யாசித்து பின் வாசித்து
வாசித்த நட்பை சுவாசித்து 
சுவாசத்தின் உச்சமாய் நேசித்து
நேசத்தின் வெளிப்பாடே காதல்.....

காதல் பற்று கொண்ட உள்ளம்
பெற்று வளர்த்த பெற்றோரை  மதித்து
அனுமதி பெற்று  மணமுடிக்காமல்
பெற்றோரை அவசொல்லுக்கு ஆளாக்குவது சரியா.....

கண்ணுக்கு கண்ணாய்  கண்ணின் மணியாய்
குழந்தை பருவம் முதல்,
கட்டிளம் காளையர் பருவம் வரை
கவனமாய்  கையாண்ட பெற்றோரை
காதல் வந்த பின்னால்
கிறுக்கு பயபுள்ளையும்
கிறுக்கி மக சிறுக்கியும்
கரை சேர்க்கும் கட்டுமரமென  அறிந்தும்
காலால் உதைக்கும் குணம் கொண்டீரே ......?

கருவுக்குள் சுமந்து
கருத்தில் உங்களை நிறுத்தி
கண்ணும் கருத்துமாய் வளர்த்தவர்களை
உதாசீன படுத்துமளவிற்கு
கிறங்கடிக்குமா காதல்.....?

கிறுக்கா இவன் என
கிறுகிறுத்து போய் இருக்கும்
கிறுக்கு நண்பர்களுக்கு மத்தியில்
கிறுக்கு முற்றிலும் தெளிந்த கிறுக்கன்...!

Comments