பாரதி காண விரும்பிய சுதந்திரமா இது


ஏ முண்டாசு கவிஞா நீ காண விரும்பிய சுதந்திரத்தை பார்...!
ஆணாதிக்கத்தை ஒழிக்க ஆடவருக்கு சமமாக அனைத்த்திலும் சாதிக்க நினைத்த அணங்குகள் அரைகுறை ஆடையில் அலைவதை பார்..!
சிறகுகளாய் வளரவேண்டிய இளஞ்சிறார்கள் சிறு வயதிலேயே காதலில் விழுந்து சீரழிந்து சருகாய் போவதை பார்....!
காணி நிலம் வேண்டிய புதுமை கவிஞா காண நிலமற்று மாறிவரும் சூழலை பார்...!
கைப்பாடு பட்டாலும் பிறர்வாழ்வே குறிக்கோளாய் கொண்ட புரட்சி கவிஞா ஊதியம் பெற்றும் 
கையூட்டிற்காக ஊழியம் செய்யும் 
ஊழியர்களை பார்...!
மக்கள் நலனில் அக்கறை இன்றி மார்க்கமாய் அரசாலும் அரசியல்வாதிகளை பார்.....!
இன்னும் இன்னும் எத்தனையோ அனைத்திலும் இதே நிலைதான்....
புரட்சி கவியே உன்னை பின்பற்றி புரட்சி செய்தால் ஆதிக்ககாரர்கள் மிரட்டலின் மிரட்சி தான் மிச்சம்.....?
கோடிக்கணக்காணோரின் புரட்சிக்கு 
வித்திட்ட புரட்சி கவியே மீண்டும் உயிர்த்தெழுந்து வா உன் புரட்சியை காண தெரு கோடியில் காத்திருக்கிறேன் கோடியருள் ஒருவனாய்.....!

Comments