தேவி தரிசணம்


ஊர் முழுதும் செப்பனிட்டு,
தெருவெங்கும் தோரணங்கட்டி,
வாசல்தோறும் வண்ண வண்ணமாய் கோலமிட்டு,
காணும் இடம்யாவும் திரள்திரளாய்
மக்களுடன் விழாக்கோலம்....

செவ்வாணம் சிவந்திருக்க,
நட்சத்திரங்கள் மினுமினுக்க,
ஒளிவிலகி இருள்சூழும் மஞ்சள் மாலையிலே,
மின்மினியாய் மின்னும் விளக்குனூடே
தேவியின் வீதிவுலா......

 வீதிதோறும் பவனிவரும்
தேவியை தரிசிக்க
வீதியில் நடை பயில்கையில்......

அங்கமிளிர தங்கமணிந்து,
 ஜரிகை மின்னும் பட்டுடுத்தி,
சிங்காரமாய் அலங்கரித்து,
செவ்விதழில் புன்னகை சிந்தி,
கண்கவர் ஒப்பனையில்
ஒய்யாரநடை பயின்றார்கள்
சிலபல ஸ்ரீதேவிகளும் பூதேவிகளும்...!

Comments