அலங்காரம்

என்னை பற்றியே உன் எண்ணம்
என்னை சுற்றியே உன் பார்வை
என்னை விதவிதமாய் அலங்கரிப்பது
எப்படி என்பதே உன் சிந்தனை.........

எனக்கு தினமொரு அலங்காரமிட்டு
பொன்மேனியின் அழகை கூர்ந்து
கவனிப்பதே உனக்கு அலாதி ப்ரியம் .......

என்னை அலங்கரித்திடும் வேளையில்
மேனியெங்கும்  உன் கை படர விடுகையில்
என்னை பிடுங்கி தின்னும் வெக்கத்தை
நீ கவனத்தில் கொள்வதில்லை .......

என்னை அலங்கரித்து நீ ரசித்ததுமில்லாமல்
எல்லோரின் பார்வையும் எம்மீது விழுகிறதா
என்பதை தூரமிருந்தே காண்கிறாய்
சந்தேகத்தால் அல்ல என்மேலுள்ள அக்கறை ...
 கடையில் அலங்கார பொம்மை ........!!

Comments

Post a Comment