மன்மத காணம்



குயிலின் குரலில் வரும் கூக்கு காணம் -உன்
குழலில் நுழைந்து வரும் காற்றின் கீதம் - உன்
எழிலில் தவழ்ந்து வரும் தென்றலின் வாசம் -உன்னை
தழுவி முகரும் போதினில் ஆகிறாய் சுவாசம்....!

விழலில் இழைந்து வரும் நீரின் வேகம் -உன்
விழியை கூர்ந்து காண்கையில்  தோன்றும் மோகம் -உன்
செவ்விதழில் சுரந்து வரும் அமிழ்தின் சாரம்-உன்
செந்தமிழின் நடையை கேட்கையில் தேனாய் பாயும்....!

மண்ணை மழை முத்தமிட வாசம் கமழும்-உன்னோடு
மன்மத ராகம் மீட்டும் போது அதுநிகழும் -அதை
மனதில் அசை போடுகையில் சுவையாய் இனிக்கும்-அது
மறுமுறை நிகழ்கையில் கண்ணீல் நீர் துளிர்க்கும்....!!





Comments