மௌனம்

அன்பின் வெளிப்பாடு 
அறிவின் வெளிச்சம் 
அளவிடமுடியா ஆழம் 
அழுத்தத்தின் அமைதி 
அதிகாரத்தின் கர்வம் 
ஆபத்தான அணு ஆயுதம் 
இழப்பின் வருத்தம் 
இனிமையான காதலுணர்வு 
ஏளனத்தின் இயலாமை 
கேள்விகளின் பதில் 
தெளிவின் பிறப்பிடம் 
வெளிக்கொணரமுடியா அழுகை 
வார்த்தையில்லா மொழி 
பலருக்கு  நிம்மதி 
சிலநேரம் வியப்பு
சிந்தனையின் தேடல்  
சொல்லிடமுடியா சம்மதம் 
பெருமையின் மதிப்பு 
மிரட்சியில் பயம் 
மொத்தத்தின் சங்கமம் இந்த 
மௌனம் .....!

Comments