இயற்கையை காப்போம்




கார்க்காலம் வந்துவிட்டால்
கார்முகில்கள் கொஞ்சி விளையாடும்

காதோரம் சிலிர்க்காற்று சலசலக்கும்
காக்கும் கடவுளின் கைங்கர்யத்தால்
கார்த்திகை பொழுதுகள் முழுதும்
 காற்றோடு மழைபொழியும்...
காடுகள் தழைத்து வலங்கொழிக்கும்
காய்த்து குலுங்கும் பழங்களை
கொத்திதின்றும் பறவைகள் கிறீச்சிடும்
காக்கைகள் கரைந்து ஆரவாரிக்கும்
காடைகள்  கூட்டத்தோடு இடம்பெயரும்
காலை கொட்டிதீர்த்த அடைமழையில்
காய்கணிகள் நீரில் மிதந்துவரும்..
காளான்கள் குடைபோல் முளைத்திருக்கும்..
காளையர் கூட்டம் நனைந்து மகிழ்ந்திருப்பர்..
குளத்தில் கமலம் பூத்துக்குலுங்கும்
கமலத்தின் இலைகள் நீரில் பளபளக்கும் -நீரில்
கால்பதித்து மழலைகள் கும்மாளமிடுவர்
கமலத்தின் இலை பறித்து 
குடைபிடித்து நனைந்தபடியே
காகிதக்கப்பலை நீரிலிட்டு மகிழ்வர்
காலங்கள் கணிந்ததால் விவசாயம் செழிக்கும்
கார்முகிலை தந்து காத்தவனுக்கு
காணிக்கை செலுத்தி  நன்றி கூறுவர்
கடவுள் அருளால் வாழ்வு சிறக்கும்...


காலங்கள்  வெகுண்டோடும்
காற்று பலமாய் அசைந்தாடும்
கார்முகிலும் கலைந்தோடும்
கரைபுரண்டோடிய நீர்நிலையெல்லாம்
காணல் நீரே தெரியும்
காடுகள் காய்ந்து  இலையுதிர்ந்து
கானும் இடம்யாவும்
காலனின் மரணஓலமே கேட்கும்
காடுகளை அழித்ததன் பயனாய்
காக்கும் கடவுளும் 
கைகட்டி வேடிக்கை பார்ப்பான்
கணமழையில் மூழ்கிய
காகிதக்கப்பல் போல் வாழ்வும் 
கெட்டொழிய நேரிடும்..
காப்பவன் கைகட்டி கொள்வதால்
காலம் கடந்து சென்று
கார்த்திகை வந்தாலும்
கார்க்காலமும் கார்முகிலும் 
காணல் நீராகும்...
காளையரே சிந்திப்போம்
காடுகளை உருவாக்குவோம்...!
கார்க்காலத்தை காத்திடுவோம்...!!

Comments