கைக்கோர்த்துப் பயணிப்போம் எந்நாளும்

தொட்டதும் கைப்பற்றிக்கொள்ளும் 

தோழிப்போல் கண்டதும்

தேன்மொழியை மோகம் கொண்டு

தெள்ளமிழ்தாய் இனிக்கும்

தேண்தமிழின் இதழ்சுவை பருகிட

தொடர் விருப்பம் இருந்தும்

தொய்வு ஏற்படுத்துகிறது

தொடரும் பணிச்சுமை....


தொடர்ந்துப் பயனித்தாலும்

தொடாமல் பலநாள்

தொட்டுக்கொண்டு சிலநாள்

தொட்டும் தொடமால்  கணநாள்

தொடர்ந்து அவளீர்ப்பில்

தொலைந்துக் கொண்டிருக்கிறேன்..


தொன்றுத்தொட்டு வணப்பில்

தொன்மை மாறாமல் 

தொடர்ந்து இன்சுவைத்தரும்

தொல்காப்பியம் தொட்டு

தொன்னூல் வரை அவளுடல்

தொடாதப் பாகங்களை..

தொட்டுப்பார்க்கத் துளியும் துனிவில்லை


தொடாமலிருந்தும் முடிமுதல்

தொடைவரை  விரல் தீண்டி

தொடர்ந்து அவளுடைய

தோல்ப்பிடித்துக் கைகோர்த்து 

தொடர்ந்துப் பயணித்திட  

தொண்டனுக்கு ஆசைதான்...


தொலைவில் தொடுவானம்

தொட்டுவிடும் தூரமில்லையெனினும்

தொட்டுக்கொண்டிருக்கும் சமுத்திரமாய் 

தொட்டுக் கொள்ளாமலே

தொடர்ந்துத் தொலைதூரச்செல்லும் 

தொடர்வண்டித் தடமாய்

தொடர்ந்து அவளை

தொடரத் திண்ணம்...

தொடருவேன் எந்நாளும்.... !!

Comments